பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9s; குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு இதனை உணர்ந்த ஆண்மான் தான் குடிக்காமல் ஒதுங்கி நின்று பெண்மானைக் குடிக்குமாறு செய்ய எண்ணுகின்றது. பெண்மானும் அவ்வாறே ஒதுங்கி நிற்கின்றது. இதையறிந்த ஆண்மான் ஒரு தந்திரம் செய்கின்றது. பெண்மானுடன் தானும் செல்லுகின்றது இரண்டும் தண்ணிரில் வாயை வைக் கின்றன. ஆண் மானோ குடிப்பதுபோல் நடித்து நீரை உள்ளுக்கிழுத்துப் பருகாமல் உறிஞ்சி மூச்சு விட்டுக் கொண் டுள்ளது. பெண்மானின் நீர் வேட்கை தணிய வேண்டுமே என்ற தன் விருப்பத்தை இவ்வாறு நிறைவேற்றிக் கொள்ளு கின்றது தான் நீரின்றி வருந்தும் அளவிற்குத் தியாகம் செய்துவிடுகின்றது. சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி.” என்பது மேற்கண்ட நிகழ்ச்சியை விளக்கும் கவிதை. இங்ஙனம் நடைபெறுவது இயலாததொன்று என்பதைக் கவிஞன் நன்கு அறிவான். ஆயின், அன்பின் காரணமாக ஆண்மான் பெண் மானுக்கு வேறு உதவிகளைச் செய்தலை அறிந்த அவனு டைய உள்ளம் இவ்வாறு கற்பனை அமைக்க விழைந்தது. ஒரளவு கவிதை மனப்பான்மையுள்ள நாம் அதனைப் படித்து நன்கு அநுபவிக்கின்றோம். கவிஞனுடைய அநுபவம் நம் அது பவமாக மாறிவிடுகின்றது. கவிஞன் கற்பனை செய்தல் பகற்கனவு (Daydream) காண்பதை யொத்தது என்பர் உளவியலார். நம்முடைய பகற்கனவின்பொழுது எண்ணங்கள் மிகக் கோவையாக எழு கின்றன; செயல்கள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்று 9. ஐந்திணை ஐம்பது-38