பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு $3; கற்பனை செய்து கொண்டு நம் விருப்பப்படி வானக் கோட் டைகளைக் கட்டுகின்றோம். சில சமயம் நாம் எழுதப்போகும் கற்பனைக் கதையில் நம்மையே கதைத் தலைவனாகவும் அமைத்து விடுகின்றோம். இவ்வாறு கருத்து நிலையில் செய் யப்பெறும் செயல்கள் எண்ணற்றவை. கனவு காணும் நாம் உள்ளதை உள்ளவாறு காண்பதில்லை; உள்ளம் விழையு மாறே காண்கின்றோம். நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றின் அடிப்படையின் மேல் நடக்க வேண்டியவற்றைச் சேர்த்துக் காண்கின்றோம். நடக்க வேண்டியவற்றிலும் நம் உள்ளம் விரும்பும்வகையில் அமைத்துக் காண்கின்றோம். அப்பொழுது தான் மனம் அக்கனவில் நெடுநேரம் திளைத்து இருக்க முடியும். பாரதியாரின் குயில் பாட்டு உண்மையிலேயே ஒரு கனவு நிலையில் எழுந்த பாட்டாகும். களி வெறியில் உண்டாகும் மிகைப் பேச்சுபோல கவிதா தேவியின் அருள் தோன்றிய நேரத்தில் தன்னையும் மறந்து கொட்டிய கற்பனையாகும். ஆங்கிலத்தில் கோல ரிட்ஜ் படைத்த குப்லாகான்’ என்ற கவி தையைப் போலவே, குயில் பாட்டும் அமைந்து விடுகின்றது என்று சொல்லலாம். குயில் பாட்டு ஒரு காட்சிதான், ‘செந் தமிழ்த் தென்புதுவையென்னும் திருநகரில், மேற்கே சிறு தொலைவில் மேவுமொரு மாஞ்சோலையில் வேடர் வராத விருந்துத் திருநாளில் புேடைக்குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில் வீற்றிருந்து பாடியதைக் கவிஞர் காண்கின் றார். இது தனவுலகக் காட்சி. இதுவே கனவுலகில் கற்பனைச் சிறகுகள் பெற்று குயில் பாட்டாக வடிவம் பெறுகின்றது. கவிஞரின் உணர்வு: பாரதியார் கூர்ந்து துணுகி நோக்கும் திறன் படைத்தவர். தாம் படைக்கும் கதை மாந்தர்கள் அல்லது நிகழ்ச்சிகளில் தம்மையே இனங் காட்டுவார். கலைஞனுக்கென்று தனிப் பண்பு ஒன்றில்லை. தான் படைக்