பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 குயில்பாட்டு ஒரு மதிப்பீடு கும் கதைமாந்தனாகவே ஆகிவிடுவான் என்று கூறுவர் அறிஞர். ஒரு கலைஞனின் பெருமையை எடுத்குக் காட்டும் போது இந்த எதிர்மறைப் பண்பே அதிகமாக வலியுறுத்தப் பெறும்.இதனையே உளவியலார் ஒட்ட உணர்தல் (Empathy) என்று குறிப்பிடுவர் ஒட்டஉணர்தல் என்பது தன்னைப் பிற ராகவே கருதி உணர்வது. குயில் குரங்கையும் மாட்டையும் நோக்கிப் பேசும்போதும், குரங்கு சேட்டை செய்வதைக் காட்டும்போதும் கவிஞர் குயிலாகவும், குரங்காகவும் ஆய்விடு கின்றார். அந்தந்தக் கதை மாந்தராக நின்று பேசுகின்றார். குரங்குபற்றிய வருணனையும் மாடுபற்றிய வருணனையும் பாரதியாரின் கூர்ந்து நோக்கும் திறனை மெய்ப்பிப்பனவாக அமைகின்றன. நகைச்சுவைக் கூறுகள்: குயில் பாட்டில் நகைச்சுவைக் கூறுகளும் அமைந்து பாட்டின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்துகின்றன. நகைச்சுவை என்பது என்ன? இயற்கைக்கு மாறாக நாம் எதையாகிலும் உணர நேர்ந்தால் அது தகைப்பை ஊட்டும். ஒர் ஆடவன் மகளிர் அணியும் ஆடையை வேட்டிபோல் அணிந்து கொண்டு சென்றால் அவனைப் பார்ப்பவர்கள் உள்ளத்தில் ஒரு வேற்றுமை தோன்றுகின்றது. அதையே நாம் நகைப்பின் மனநிலையாகக் கருதுகின்றோம். ஒருவன் புத்திக் குறைவினால் - பைத்தியத் னால் - செய்யும் செயல்களும் நகைப்பை விளைவிக் கின்றன. இவ்விதமே ஒரு மனிதனைப்போல் மற்றொரு மனிதன் பேசினாலோ நடந்தாலோ, அதிலும் நகைப்பு உண் டாவதை நாம் காண்கின்றோம். ஆயினும், இயற்கைக்கு மாறுபாடான கூறே நகைச்சுவையினைத் தூண்டுகின்றது; நகைச்சுவை உண்டாகும் நிலைகளையெல்லாம் சோதித்துப் பார்த்தால் இயற்கைக்குப் புறம்பான கூறு அங்கு விளங்கும் என்ற உண்மையினைத் தெளியலாம்.