பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ குயில்பாட்டு.ஒரு மதிப்பீடு கிடைத்தால் தான் தன் அன்பைக் காண்பிக்கும் விதத்தையும் எடுத்துரைக்கின்றது. மனிதருக்கு உதவிசெய்து களைத்துப் படுத்திருக்கும்பொழுது, தான் அதன் காதில் மதுர இசைபாடு வதாகக் கூறுகின்றது. பின்னர், வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன், வாலி லடிபட்டு மனமுகிழ்வேன், மாவென்றே ஒளியிடுதும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன், கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து, நீர் மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் பக்கத்திருந்து பல கதைகள் சொல்லிடுவேன் காளை யெருதரே, காட்டிலுயர் வீரரே, தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர் காதலுற்று வாடுகின்றேன்’ என்று பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும் கொண்டு பேசுகின்றது. எருதின் அழகு வருணனையும் குயி வின் தொண்டும் நம்பால் நகைச் சுவையை எழுப்புகின்றதல் லவா? ஈண்டு எடுத்துக் காட்டின குரங்கின் பெருமையையும், மாட்டின் மகிமையையும் பற்றிய குயிலின் புகழ்ச்சியுரையில், உண்மையான காதலென்று வெளிப்படையாகக் காண்கின்ற விடங்களில், நகைச்சுவை உள்ளிருந்து உவப்பை உண்டாக்கு கின்றதென்பதைச் சொல்லவேண்டா. இந்த உரையில் எதிர் மறை இலக்கனை என்று சொல்லத்தக்க ஒரு காவியப் பண்பு ஒளிர்கின்றது.மேலாகத் தோன்றும் பொருளுக்கு நேர்விரோத மான பொருள் உள்ளடங்கி நகைச்சுவையை வளர்க்கின்றது. இன்னும் ஓரிடத்தில் நகைச் சுவை தட்டுப்படுகின்றது. முனிவர் குயிலின் முற்பிறப்பின் வரலாற்றைக் கூறிக் கொண் டிருக்கும்போது-'சந்திஜெபம் செய்யும் சமயமாய்விட்டது: என்று கூறித் திடீரென்று கதையை நிறுத்துவது நகைச் சுவையைவிட உயர்ந்த சுவை கொண்டிருப்பதாகக் கருத