பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii ரசிகமணி டி.கே.சி. சிதம்பரநாத முதலியா ை(டி.கே சி.) அறியாதவர்கள் அரியர். 1949 மார்ச்சு முதல் இவரை அறி வேன். இந்த ஆண்டு காரைக்குடிக் கம்பன் விழாவிலும்’ அமராவதிப் புதுரர் மகளிர் இல்ல ஆண்டு விழாவிலுமாக இரண்டு சொற்பொழிவுகளைக் கேட்டுச் சுவைத்தவன். இதற்கு முன்னர் இவரது பல நூல்களை, குறிப்பாக இவர் பதிப்பித்த இராமாயணத்தை, படித்துச் சுவைத் திருந்தேன் இரண்டு நாள் பழக்கந்தான்; கவிதைகளை நாடி படித்துப் பார்த்துச் சுவைக்கும் பழக்கத்தைப் பெற்றேன். சுவைக்கும் பழக்கம் வருவது முன்னைய பிறப்பில் புண்ணியம் செய்தவர் கட்குதான் கைவரப் பெறும் என்று பெரியோர்கள் பணிப்பர். இப்பழக்கம் கைவரப் பெறுவது அரிய முயற்சியால்தான் ஏற்படும் என்பதை இப்படிச் சொல்லி வைத்தனர் போலும் . இத்தகைய பெரியாருக்கு இந்நூலை அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன். அமரராகிய இவர்தம் ஆசியால், இலக்கியங் களைச் சுவைக்கும் பழக்கம் மேன்மேலும் வளரும் என்பது என் திடமான நம்பிக்கை. எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்!" என்று தம் கொள்கையையே அடித்துக் கூறினவர் பாரதியார். எழுத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவருக்கும் இக் கொள்கை மறை வாக்காகவே இருத்தல் வேண்டும். இத் தகைய கொள்கையில் வாழ்ந்த கவிஞருக்குத் தமிழ் கூறு நல் லுலகம்’ எங்கணும் நூற்றாண்டு விழாக் கொண்டாடப் பெறுகின்றது. குருவிக்குத் தகுந்த இராமேச்சுரம்’ என்ற பழமொழிக் கொப்ப இச்சிறியேனும் அக்கவிஞரேறுபற்றி தான்கு ஆய்வு நூல்கள் வெளியிட்டு அவர் நூற்றாண்டு 3. சுயசரிதை - பாரதி அறுபத்தாறு - 18.