பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv விழாவினைக் கொண்டாடுகின்றேன். மூன்றினைப் பதிப்பகத் தார் வெளியிட்டனர். இதனை நானே என் பொறுப்பில் வெளியிட்டு மகிழ்கின்றேன். இச்சமயத்தில் பாரதியாரின், செய்யும் கவிதை பராசக்தி யாலே செய்யப்படுங்காண்" பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்" என்ற வாக்குகளைச் சிந்திக்கின்றேன். பாரதியார் கருதுவது போல் இந்துரலை யான் எழுதி வெளியிட்டதற்கு என்னுள்ளே அந்தர்யாமி இரு க் கு ம் திருவேங்கடமுடையானே காரணன ஆவான். அவனே எனக்கு நோயற்ற நிலையையும் எல்லா நலன்களையும் ஈந்து என்னை இயக்கி நன்னெறிப் படுத்தி வருபவன். அவனே பாரதியார் வழிபடும் முருகனா கல்ம் சக்தியாகவும் இருந்து வருகின்றான்; அவனை மனம் மொழி, மெய்களால் வழுத்தி இறைஞ்சி வணங்குகின்றேன். வேலைப் பணிந்தால் விடுதலையாம்; வேல் முருகன் காலைப் பணிந்தால் கவலைபோம்-மேலறிவு தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று சொன்னால் அதுவே சுகம்." சென்னை-600 04) & • நவம்பர் 30, 1982 க. சுப்பு ரெட்டியார் SAASA SAASAASAASAASAASAAAS 4. est. 5fr. torr - 26 5. தோ. பா. பேதை நெஞ்சே - 5 6. டிெ. விடுதலை வெண்பா. 4