பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் பின்னணி ஒருநாள் காலை நேரம். செந்தமிழ்ப் புதுவைத் திருநகரில் மேற்கே ஒரு மாஞ்சோலை, அச்சோலை பாரதியாரின் நண்பர் கிருட்டிணசாமி செட்டியாருக்குச் சொந்தமானது. அந்த இடத்திற்குப் பாரதியார் வருகின்றார். அவர் வந்த நாள் அந்தச் சோலைக்கு வேடர்கள் வராத விருந்துத் திருநாள். அன்று பேடைக் குயிலொன்று ஒரு மாமரத்தின் வான்கிளை யில் வீற்றிருந்து பாடுகின்றது. அந்தப் பாட்டை அச்சோலையி லிருந்த ஆண் குயில்கள் எல்லாம் கேட்கின்றன. அவற்றின் மேனிபுளகமுற்று ஆற்றல் அழிவு பெற்று உள்ளத்தில் காதல் அனல் பெருகுகின்றது. அந்த இன்னிசையைச் சோலைப் பறவைகளெல்லாம் தத்தம் காலைக் கடன்களையும் மறந்து பரவசமாய்க் கேட்டு அநுபவித்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பெட்டைக் குயில்பாடும் இன்னிசை, இன்னமுது காற்றில் கலந்து பரவுதல் போலும், மின்னல் சுவை மெல்லிய தாகி மிக இனிதாய்ப் பரவுதல் போலும், வானத்து மோகினி யாள் குயிலுருவங்கொண்டு ஏற்றம் பெற்று விளங்குதல் போலும் எங்கும் பரவுகின்றது. அப்போது அங்கிருந்த கவிஞரும்,