பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் பின்னணி 3 என்றும், அருளே யாநல்நல் லொளியே: ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின், இருளே, இருளே, இருளே. என்றும், இன்னும் பலவாறும் விரிகின்றது. என் அருமைப் பேராசிரியர் திரு. சேஷய்யங்கார், (வேதியியல் பேராசிரியர், புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி) குக்குக்கூ, குக்குக்கூல் குக்குக்கூ...என்று குயில் கூவுவதுபோல் தன் குரல் எழுப்பு வதையும், அதனைத் தொடர்ந்து, காதல், காதல், காதல், காதல் போயின், காதல்போயின், சாதல், சாதல், சாதல், என்ற அடிகளையும் இதனைத் தொடர்ந்து வரும் ஒன்பது பாடற் பகுதிகளையும் குக்குக்கூ என்ற ஒலிவருமாறு குயில் கூவுவதுபோல் தாம் பாடி மகிழ்வதையும் கேட்போரை மகிழ்விப்பதையும் நான் நேரில்கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன்" அவர்பாடும் முறையில் இயல்பவர்கள் பாடிப் பயிற்சி பெற விழைவோர் குயில் பாட்டைப் பாடிப் அநுபவிக்கலாம். இந்தக் குயிலின் கதையைத்தான் கவிஞர் தம் குயில் பாட்டில் விரித்தோதுகின்றார் குக்குக்கூ, குககுக்கூ என்ற குயிலின் பாட்டுதான் கவிஞரின் சிந்தையில் தேங்கி, சிந்தனை யில் மலர்ந்து, குயில் பாட்டு என்ற கவிதையாக வடிவங் கொள்ளுகின்றது. இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டு குயில் பாட்டைப் படித்து அநுபவிக்க வேண்டும். 5. 1934-39-இல் நான் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் வேதியியல் படித்து பிஎஸ்.சி பட்டம் பெற்ற மாணாக்கன்