பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 குயில்பாட்டு, ஒரு மதிப்பீடு கின்றார். வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே, காணக்குயில் கதை சொல்லலாயிற்று.” 'மேற்குலத்தீர், உண்மை முழுதும் உரைத்திடு கின்றேன். என்னுடைய பெண்மை நிலைக்கிரங்கி பிழை பொறுத்தல் துங்கள்கடன். ஏதோ என் முன்னைவினைப் பயனால் இந்த அவனியிலே அறிவும் வடிவுங்குறுகி சிறிய புள்ளாய்ப் பிறந்து விட்டேன். என்றாலும், தேவர் கருணையினாலோ தெய்வச் சினத்தினாலோ யாவர் மொழியும் எளிதுனரும் பேறு பெற்றேன். மானுடவர் நெஞ்சத்து வழக்கையெல்லாம் தேரும் பேறும் எனக்குக் கிட்டியது. கானப் பறவை கலகலனு மோசையிலும் காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்க கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன் நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளை பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னேயோ?” என்று மேலும் பேசுகின்றது. தொடர்ந்து குயில் பேசுகின்றது. என் நெஞ்சக் குமுறலை நன்கு அறிவீர், என் மன நிலையை நன்கு புரிந்து கொண்டிருப்பீர். என் செய்வது? காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்.: ஒன்கின்றது.