பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு காதல் வாழ்க்கையில் காதலர்கள் சந்திக்கும் இடம் 'குறியிடம் என்று வழங்கப்பெறும். இது பகற்குறி இரவுக் குறி என இருவகைப் படும். குறியெனப் படுவது இரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப." களவுப் புணர்ச்சிக்குப் பிறகு மீண்டும் சந்திக்குமிடத்தைத் தலைவியே கட்டுதல் ஒருவகை மரபு. காமக் கூட்டம் தனிமையில் நிகழ்தலின் தலைவியே இடம் சுட்டுதல் மிக நன்று என்பர் தொல்காப்பியர், அவன் வரம் பிறத்தல் அறந்தனக் கின்மையின் களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் தான்செலற் குரியவழி யாக லான." என்ற நூற்பாவால் இதனை அறியலாம். இதற்கு உரை கண்ட இளம்பூரணரும் தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்பு, தலைவனெல்லையை மறத்தல் தலைவிக்கு அறமாகவின்மையானே, குறியிடம் கூறுதல் தலைமகளதாம்' என்று தெளிவாக்குவர். குயில் பாட்டில் குயில் கவிஞரை நான்காம் நாள் அதே சோலையில் சந்திக்குமாறு வேண்டு தலில் இம்மரபினைக் காணலாம். களவுப் புணர்ச்சி உள்ளப் புணர்ச்சியே என்ற ஒரு வித மரபும் உண்டு. ”...அவர் தம்முள் மெய்யுற்றுப் புணர்ந்திலர், இருவர்தம் காமமுமே தம்முட் புணர்ந்தன என்று. இங்கினம் உள்ளங்களானின்று புணர்வது புணர்ச்சி; இது பிறரொருவர் உரை நெடுங்காலம் புணர்தலாகாது என நீங்கும் நீக்கம் பிரிவு; அப்பிரிவின்கட் சொல்லுவது மெய்யுறு புணர்ச்சிக்குச் 3. தொல். பொருள். களவியல்-49 4. ஜெ. டிெ. டிெ-30