பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

箕 குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு முடியவில்லை: சிந்திக்கும் திறனையும் இழந்து விடுகின்றார். இருபது பேய் ஒருங்கே கொண்டவர் போல் கண்ணும் முகமும் களியேறுகின்றது. காமனார் அம்புநுனிகள் அகத்தே அமிழ்ந்து கிடக்கின்றன. காதல் மயக்கத்தால் பார்க்குமிடத் தோறும் கொம்பும் குயிலுமாகக் கோடி பல கோடியாய்க்' காட்சி அளிக்கின்றன. நோக்குவ எல்லாம் அவையே போறல்' என்று காதல் வயப்பட்டாரைக் கூறுவர். அந்நிலை கவிஞருக்கு ஏற்படுகின்றது. இஃது ஒருவகை உருவெளித் தோற்றம் (tailucination) ஆகும். இராவணன் சீதையை இடைவிடாது சிந்தித்தலால் அவள் வடிவை உரு வெளித் தோற்றத்தில் கண்டதையும், அங்ஙனமே சூர்ப்பனகை இராமனை இடைவிடாது சிந்தித்தலால் அவன் வடிவத்தை அங்ங்ணமே அவள் கண் தையும் ஈண்டு நினைவு கூறலாம்.'" குயில் விளைவித்த காதல் மயக்கத்தால் கவிஞரின் சித்தம் நிலை கொள்ளவில்லை. வீட்டில் ஒருநாள் கழிவது ஒரு யுகம் போல் தோன்றுகின்றது. நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம்படுமோ? தறிபடுமோ? யார் படுவார்? ' என்று கவிஞரே தம் நிலையைச் செப்புகின்றார். எப்படியோ ஒருநாள் கழிகின்றது. மறுநாள் நீலிதனைக் காண்பதற்கு 'வித்தை செயும் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென, காவிரண்டுங் கொண்டு கடுக வருகின்றார் அச்சோலைக்கு’. கரை கடந்த வேட்கையுடன் குயிலைத் தேடுகின்றார் கவிஞர். எதிர் பாராத காட்சியைக் காண்கின்றார். 9. டிெ டிெ. டிெ. 9 10. கம்பரா. ஆரணிய மார்சன்வதை-148-149 11. கு. பா. காதலோ காதல்-அடி (8.9)