பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலின் காதல் கதை 11 அந்தச் சின்னக் குயில் ஓர் ஆண் குரங்குடன் காதல் நாடகம் நடத்துவதைக் காண்கின்றார். கவிஞருக்கோ சினம் தாங்க முடியவில்லை. தம் உடைவாளால் குயிலையும் குரங்கையும் கொல்ல நினைக்கின்றார். ஆனால் அவர் மனம் குயிலுரைக்கும் வார்த்தைகளைக் கேட்க விரும்புகின்றது. 'வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை யாதோ ஒரு திறத்தால் அறிந்து கொள்ளுகின்றார். நீசச் சிறுகுயிலும் நெருப்புச் சுவைக் குரலில் "காதல், காதல்...' என்று ஆசை ததும்பி அமுதுாறப் பாடுகின்றது. பின்னர் குரங்கு பேசுவதையும் கேட்கின்றார். இப்பேச்சு கவிஞரிடம் சினம் மூளச் செய்து விடுகின்றது. உடனே அதன் மீது கை வாளை வீசுகின்றார். அது தப்பி முகஞ்சுளித்துத் தாவி ஒளித் திடுகின்றது 'ஒப்பிலா மாயத்தொருகுயிலும்’ மறைகின்றது. இப்போது சோலைப் பறவைகளெல்லாம் தொகை தொகை யாய் ஒலிக்கத் தொடங்குகின்றன. இதற்குமேல் ஒன்றும் செய்வதறியாது தட்டுத் தடுமாறி சார்பனைத்தும் குயிலைத் தேடுகின்றார். குட்டிப் பிசாசக்குயில் எங்கும் காணப் பெறவில்லை பகல் வேளை வந்து விடுகின்றது. வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் மோனவெளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்” மெய்சோர்ந்து மனம் தளர்ந்து கண்விழி மயக்கமுறும் நிலை யில் உய்யும் வழியுணராது உள்ளம் பதை பதைக்க வீடு வந்து சேர்கின்றார் கவிஞர்; உணர்ச்சியின்றிப் படுக்கையில் வீழ்ந்து விடுகின்றார். - மூன்றாம் நாள் காலை. காலைத் துயிலெழுந்தவுடன் 'காலிரண்டும் முன்போலே, சோலைக் கிழுத்திட, சொந்த வுணர்வில்லாமே, சோலையிலே வந்து நின்று சுற்று முற்றும்’ SAASAASAASAA 12. கு. பா. 6 இருளும்ஒளியும்-அடி. (1-2)