பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு குயிலைத் தேடுகின்றார். அப்பொழுது கோலப் பறவை களின் கூட்டமெல்லாங் காணவில்லை. சோலையின் மூலையிலிருந்த ஒரு மாமரத்தின் மோட்டுக் கிளையிலிருந்து கொண்டு நீலக்குயில்தன் நீண்டகதைச்சொல்லுவதையும்.கீழே யிருந்து கிழக் காளைமாடு ஒன்று அதனை ஆழ மதியுடனே ஆவலுடன் கேட்பதையும் காண்கின்றார். வெகுள்கின்றார்; கலக்கமுறுகின்றார்; நெஞ்சில் அனல் கொள்ளுகின்றார் குமைகின்றார்:குமுறுகின்றார். மெய் வியர்க்கின்றது. அக்குயி லின்மீது வாளை வீச நினைக்கின்றார். ஆனால் "இப்பொய்ப் பறவை சொல்லு மொழி கேட்டதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி' என மனம் எண்ணுகின்றது. முன்போல் வறைந்து நின்று கேட்கின்றார். குயிலும் 'மோகப் பழங்கதையைப் பொன்போற் குரலும் புது மின்போல் வார்த்தைகளும் கொண்டு தன் கதையைக் கூறி பண்டு போலே தனது பாழடைந்த பொய்ப்பாட்டை, எண்டிசையும் இன்பக் களி யேறப் பாடுகின்றது - "காதலோ காதல்...' என்று. கவிஞர் பாட்டிசையில் ஆழ்ந்து தன்னையே மறந்து விடுகின் றார். பின்னர் அறிவு தலை காட்ட, கையினில் வாளெடுத் துக் காளையின்மீது வீசுகின்றார். வாள் தன் உடலில் படுவ தற்குமுன் மாடு ஒடி மறைகின்றது. வண்ணக் குயிலும் மாயமாய் மறைந்து விடுகின்றது. பறவைகள் யாவும் மீண்டும் சோலைக்கு வந்து சேர்கின்றன; ஒலிக்கத் தொடங்குகின்றன. "நாணமிலாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை வினிலே தேடியபின் வீடுவந்து சேர்ந்துவிட்டேன்' அன்று நிகழ்ந்தவற்றைப் பலவாறு எண்ணிக் கலங்குகின்றார். எண்ணி யெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை கண்ணிலே நீர்த்ததும்பிக் கானக் குயிலெனக்கே 13. கு.பா:7. குயிலும் மாடும்-அடி (107.108)