பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலின் காதல் கதை 13 காதல் கதையுரைத்து நெஞ்சங் கரைந்ததையும் பேதைநா னங்குப் பெரியமயல் கொண்டதையும் இன்பக் கதையின் இடையே தடையாகப் புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும் ஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல் தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும் சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு முற்றும் வைரிகளாய் மூண்ட கொடுமையையும்இத்தனைகோ லத்தினுக்கும் யான்வேட்கை தீராமல் பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதும் விளங்கவில்லை. கண்ணிரண்டும் மூடக்கடுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன்." நான்காம் நாள் வருகின்றது. இந்த நாள்தான் வான் காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த, பொய்ம்மைக் குயி லென்னைப் போந்திடவே கூறிய நாள்" ஆகும். இன்று எத்துக்குயில்...எய்துவித்த தாழ்ச்சியெலாம், மீட்டும் நினைத் தங்கு வீற்றிருக்கின்றார். மனம் காட்டுத் திசையை நாடுகின்றது; வானத்தில் அக் கரும்பறவை வந்து வழி காட்டிச் சென்றிட கவிஞர் அதே மாஞ் சோலைக்கு வருகின்றார், ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல் சின்னக் கருங்குயிலி செவ்வனே வீற்றிருந்து பொன்னங் குழலின் புதிய ஒளிதனிலே பண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தான்பாடிக் கொண்டிருத்தல் கண்டேன், குமைந்தேன்; எதிரேபோய் 'நீசக் குயிலே நிலையறி யாப் பொய்ம்மையே, ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும் எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை நண்ணிஇங்குக்கேட்கநடத்திவந்தாய் போலுமெனை' " 14. டிெ. டிெ அடி (109 -122) 15. ஷ்ெ. நான்காம் நாள்-அடி (28-36)