பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலின் முற்பிறப்பின் வரலாறு குயிலே கவிஞருக்குத் தன் வரலாற்றை எடுத்துரைக் கின்றது. 'முன்னம் ஒரு நாள் பொதிமலைச் சாரலில் ஒரு சோலை யில் தன்னந் தனியாக ஏதோ சிந்தித்த வண்ணம் ஒரு மரக் கிளையில் வீற்றிருந்தேன். அப்போது முனிவர் ஒருவர் ஆங்கு வந்தார் அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன். அவரும் என்னை வாழ்த்தி அருளினார். அவரை நோக்கி, 'மறைபல தேர்ந்த முனிவரே, நான் கீழ்ப்பறவைச் சாதியில் தான் பிறந்தேன். என்றாலும், சாதிக்குயில்களின் இயல்புப் போலன்றி என்றன் இயல்பு வேறாக இருக்கின்றது. எல்லோ ருடைய மொழியும் எனக்கு விளங்குகின்றது. மானிடர்க்கு வாய்த்திருக்கும் அறிவும் என்பால் அமைந்துள்ளது. இதற்குக் காரணம் என்ன? அருள் கூர்ந்து யான் உணரும் வண்ணம் சொல்லியருள்க’ என்று வேண்டினேன். முனிவர் கூறுகின்றார்: "குயிலே! கேள். சேர நாட்டில் தென்புறத்திலுள்ள தொரு மலையில் வீரமுருகன் என்ற ஓர் வேடர்குலத் தலைவன் இருந்தான். அவனுக்கு அன்பு மகளாகப் பிறந்து வளர்ந்தாய். சின்னக் குயிலி என்பது ۔۔۔ --سمسس سمسمس--سسمہ -------سس۔ سب س-TamilBOT (பேச்சு) 13:46, 14 பெப்ரவரி 2016 (UTC) 1. கு. பா. குயிலின் முற்பிறப்பு வரலாறு. அடி (23-27)