பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு உன் திருநாமம். மூன்று தமிழ் நாட்டிலும் நின்னையொத்த அழகுடைய நங்கை வேறெவரும் இலர் என்று எல்லோரும் புகழும் வண்ணம் சீருயர நின்றாய். மாடன் என்ற பேர் கொண்ட நின்மாமன் மகன் ஒருவன் நின்னழகைக் கண்டுருகி காமன் கணைக்கு இரையானான். நின்னை மணந்து கொள்ள நெடுநாள் விரும்பினான்: நின்னையே சுற்றிக் கொண்டு திரிந்தான். பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாகச் சித்தம் வருந்தி நின்றான், உனக்கோ அவன்மீது காதல் எழ வில்லை. அவன் சாலவும் வருந்துதல் கண்டு சகிக்காமல் அவன்மீது இரக்கம்கொண்டு அவனுக்கு மாலையிட வாக்களித்து விட்டாய். "இன்னிலையில் நின்னுடைய அழகின் புகழ் நாடெல் வாம் பரவியிருந்தது. தேன் மலையில் மொட்டை புலியன் என்ற பெயர் கொண்ட வேடர்கோன் ஒருவன் இருந்தான். அவனோ செல்வத்தாலும் வீரத்தாலும் பெரும்புகழ் பெற்றி ருத்தான். நாடு முழுதும் அவன் வீரச் செயல்களைக் கண்டு அஞ்சும் நிலையிலிருந்தது. அவனுடைய மகன் நெட்டைக் குங்கனுக்கு தின்னை மணம் பேசினர் நின்பெற்றோர். ஆறிரண்டு நாட்களில் பாங்காய்த் திருமணத்தை முடிக்கவும் உறுதியாயிற்று. இந்தச் செய்தி நின் மாமன் மகன் மாடலுக்கு எட்டியது. அவன் ’மனம் புகைந்து நின்னை நாடி வந்து தானா மொழி கூறினான். நீயும், அவன்மீது நீண்ட கருணையினால், மாடா, பொங்கியெழும் சினத்தைத் தவிர்ப்பாய். ஏதோ நிர்ப்பந்தத்தால் குரங்கனுக்கு மணாட்டியாக தேர்ந்து விட்டாலும், கட்டுப்படி அவர் தங் காவலிற் போய் வாழ்ந்தாலும், மூன்று திங்களுக்குள்