பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலின் முற்பிறப்பின் வரலாறு 17 மருமம் சில செய்து பேதம் விளைவித்து இங்கு வந்து விடுவேன். தாலியை மீண்டும் அவர் கையில் கொடுத்து விட்டு எட்டு மாதத்தில் நின்னையே நாயகனாய் அடைந் திடுவேன். நின்னிடம் பேச்சுத் தவற மாட்டேன். என்னை நம்பிடுவாய் என்று அவனிடம் உரைத்தாய். 'சின்னாட்கள் கழிந்த பின்னர், நீயும் நின்னொத்த தோழியரும் ஒரு நாள் மாலை காட்டினிடையே களித்தாடிக் கொண்டிந்தீர்கள். சேரமானின் அருமை மகன் வேட்டையின் பொருட்டு நீங்கள் விளையாடிக் கொண்டிருந்த காட்டிற்கு வந்தான். துணைவர்களைப் பிரிந்து, ஒரு மானைத் துரத்திக் கொண்டு நீ இருக்குமிடம் வந்து சேர்ந்தான். நீயும் தோழி யரும் சேர்ந்து நின்றாடுவதைக் கண்ணுற்றான். அவன் மையல் கரை கடந்து நின்னைத் தனக்காக்கிக் கொள்ள நிச்சயித்தான். நீயும் அவன்மீது மோகங் கொண்டு விட்டாய். நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய் அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்து விட்டீர்’ நின் தோழியரும் அவனை ஆழியரசன் அரும் புதல்வன் போலும் எனக் கருதி அஞ்சி மறைந்து விட்டனர்; இளவரசன் தன்னை நினக்கு அறிமுகம் செய்துகொண்டு தன் காதலை நின்னிடம் உரைத்தான். நீயோ உன் மண்டு பெருங் காதலை மனத்தடக்கிக் கொண்டு, ‘ஐயனே! உங்கள் அரமனையில் ஐந்நூறு தையலருண் டாம்:அழகில் தன்னிகரில் லாதவராம் கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்; அன்னவரைச் சேர்ந்தேநீர் அன்புடனே வாழ் ந்திருப்பீர்! 2. டிெ.டிெ-அடி (71-72) கு-2