பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 குயில் பாட்டு:ஒரு மதிப்பீடு மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள் யான், கொல்லு மடற்கிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ? வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ - பெண்ணெடுப்பார்? பத்தினியா வாழ்வதெல்லாம் பார்வேந்தர் தாமெனினும் நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை, பொன்னடியைப் போற்றுகின்றேன் போய்வருவீர் தோழியரும் என்னைவிட்டுப் போயினரே, என்செய்கேன்?" என்று நெஞ்சங் கலக்க மெய்தி நின்றாய். நின் காதலை விழிக் குறிப்பினா லறிந்துகொண்டு பக்கத்தில் நெருங்கி கன்னஞ் சிவக்க முத்தமிட்டான். வேத நெறிப்படி மணந்து கொள்ள வாக்கும் அளித்தான். நீங்கள் கந்தர்வநெறியில் கலந்துகொண்டு விட்டீர்கள். அரசன் ஆவலுடன் நின்னை ஆரத் தழுவி நின் கோவை இதழ் பருகிக் கொண்டிருக்கையில் எதிர்பாராத நிகழ்ச்சியொன்று நடைபெற்று விட்டது சற்று முன்னே வேற்றுார் சென்று திரும்பிய நெட்டைக் குரங்கன் நீ தோழியருடன் காணகஞ் சென்றதைக் கேள்வியுற்று குதுரகலமாய் நின்னைக் காண வந்தான். நீ சேரவேந்தனுடன் இன்பம் பருகிக் கொண்டிருந் ததை நேரில் பார்த்து விட்டான். மனத்தில் எழுந்த சினத் துடன் கலங்கி நின்றான். நெட்டைக் குரங்கன் ஊருக்கு வந்த செய்தியையும் அவன் நீ தோழிமார்களுடன் கானகம் சென்றதைக் கேட்டு நின்னைக் காண கானகம் சேர்ந்ததையும் யாரோ மாடனிடம் பற்ற வைத்து விட்டனர். பொறாமை மீதுற ஈரிரண்டு பாய்ச்சலிலே நீரோடும் மேனி நெருப் போடுங் கண்ணுடனே அங்குவந்து சேர்ந்தான் மாடன். இவன் வந்ததைக் குரங்கன் பார்க்கவில்லை. அங்ஙனமே 3. ைடிை அடி (31-91)