பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு சொல்லி லகப்படுமோ? தூயசுடர் முத்தை யொப்பாம் டல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினையான் என்றும் மறத்தல் இயலுமோ? பாரின்மிசை நின்றதொரு மின்கொடிபோல் தேர்ந்த மணிப் பெண்ணரசின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் தேனி லினியாள் திருத்த நிலையினையும் மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ?" இந்த அழகிய பெண்ணுருவத்தைக் கண்டு பெருங்களி கொண்டு நண்ணித் தழுவி நறுங் கள் இதழினையே முத்த மிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் சித்தம் மயங்கிச் சிலபோழ்து இருக்கின்றார். கவிஞரின் கனவு கலைகின்றது. விழிதிறந்து பார்க்கும்போது சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம்பாய்-வரிசையெல் லாம் ஒத்திருக்க, "நாம் வீட்டில் உள்ளோம்’ என்று நனவு நிலைக்கு வருகின்றார். சோலை, குயில், காதல், சொன்னகதை அத்தனையும் மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே." கண்டு கொள்கின்றார். தி இடி டிெ. ஆடி (226-241) 7. மேற்படி மேற்படி, அடி. (257-59)