பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலோ காதல் 25 யாரிருந் தென்னையிங்கு தடுத்திடுவார்-வலு வாக முகத்திரையை அகற்றி விட்டால்? காரி யமில்லையடி வீண்ப சப்பிலே-கணி கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பானோ?" என்றும் கண்ணன் வாக்குகளில் வரும் கவிதைப் பகுதியில் காதலுணர்ச்சியின் கொடுமுடிகளைக் காட்டுவர் கவிஞர். பிறிதோரிடத்தில், பாட்டினிலே காதலை நான் பாடவேண்டிப் பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே" என்று தொடங்கிக் காதலின் புகழைப் பாடுகின்றார். காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதல் கலைக ளுண்டாம்; ஆதலினால் காதல்செய்வீர் உலகத் தீரே அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்; காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்; கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். ஆதிசக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்: அயன்வாணி தனை நாவில் அமர்த்திக் கொண்டான்; சோதிமணி முகத்தினளைச் செல்வமெல்லாம் சுரந்தருளும் விழியாளைச் திருவை மார்பில் மாதவனும் ஏத்தினான்: வானோர்க்கேனும் மாதரின்பம் போற்பிரிதோர் இன்பம் உண்டோ? காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் - கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்." 6. கண்ணம்மா.என் காதலி3-2 7. சுயசரிதை: 2. பாரதி அறுபத்தாறு-48 8. மேற்படி, மேற்படி 49, 50