பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலோ காதல் 29 வழி, எம்பெருமான் கருவறையிலுள்ள படி இவற்றுள் எதுவாக இருப்பினும் அந்நிலை தனக்கு வாய்த்தால் போதும் என்று சிந்திக்கும் ஆழ்வார், எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே. * என்று முத்தாய்ப்பாக ஏதேனும் ஒரு பொருள் என்ற முடிவாக வெளியிடுகின்றார். பாரதியாரும் இவண் குறிப் பிட்ட கண்ணன் பாட்டில்’ தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!' என்ற பகுதியில் இம்பருலகிலும் உம்பருலகிலும் உள்ள இன்பமெல்லாம் கண்ணம்மா என்ற ஒருருவத்தில் அமைந்து கிடப்பதாகக் கூறுகின்றார். இக்காதல் உணர்வு பண்டைய இலக்கியங்களில் பயின்று வரும் முறை பாரதியார் தம் பாடல்களில் காதலைப்பற்றி அற்புதமாகச் சித்திரிப்பதற்குக் கைகொடுத்து உதவியிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகின்றது. பருவம் நிரம்பிய ஒர் ஆடவன் தன் வாழ்க்கையில் எத்தனையோ மகளிரைப் பார்க்கின்றான். அங்ங்னமே பருவம் நிரம்பிய நங்கை யொருத்தியும் எத்தனையோ ஆடவர் களைப் பார்க்கின்றாள். எல்லோரிடமும் காதல் ஏற்படுவ தில்லை. ஆனால் இவர்கள் ஊழ்வினையால் ஒரு பொழில கத்து எதிர்ப்பட்டபோது காதல் உணர்ச்சி இவர்களிடையே எழுகின்றது என்று கூறுவது ஒர் இலக்கிய மரபு. 15. பெரு. திரு. 4:10 16. கண்ணம்மா-என் காதலி -(6) - 8