பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3% குயில் பாட்டு:ஒரு மதிப்பீடு ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோ னாயினும் கடிவரை இன்றே" என்பது தொல்காப்பியம். இதனை இந்த ஆசிரியர் ஒரு விதி யாகவே-இலக்கண விதி மட்டிலும் அன்று, தலை விதியும் கூடத்தான்-கூறுவர். இதற்கு உரை கண்ட இளம்பூரணரும் காம நிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடு தல் நல் வினையான் அல்லது வாரா தென்பது கருத்து’’ என்று விளக்குவர். இந்த மரபினையே இறையனார் களவியலும், அதுவே, தானே அவளே தமியர் காணக் காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்' என்று நூற்பா இட்டுக் காட்டும். இதன் உரைகாரரும் இம் மரபினை மிக அழகாக, தெளிவாக, விளக்குவர். இந்த மரபினை-உத்தியை-பாரதியாரும் தம் குயில் பாட்டில் கை யாண்டுள்ளார் என்று கருதுவது தவறில்லை. இங்ஙனம் கானகத்தில் வேட்டையின் நிமித்தம் இளைஞர்களுடன் வந்த இளைஞனும் வேறொரு நிமித்தத் தின் பொருட்டு அதே கானகத்திற்குத் தோழியர்களுடன் போந்த ந ங் ைக யு ம் ஒருவரையொருவர் சந்திக்க நேரிடும்பொழுது அவரவர்களுடன் வந்தவர்கள் தனித் தனியே பிரிந்து செல்வதாகக் கூறுவது காதல் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரு மரபு. இந்த மரபினை இறையனார் களவியலுரை ஆசிரியர் மிகத் தெளிவாக விளக்குவர்." இந்த 17. தொல். பொருள். களவியல்-2 18. இறை. கள. நூற்பா-2 19. இறை. கள. நூற்பா-2 இன்உரை காண்க.