பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலோ காதல் 31 மரபினைக் குறுந்தொகையிலும்" கண்டு மகிழலாம். தஞ்சை வாணன் கோவையில் குறியிடத்து உய்த்து நீங்கல்’ என்ற பகுதியில்' இது விரிவாக விளக்கப்பெறுகின்றது. குயில் பாட்டில் இந்த மரபினைக் காணலாம். கவிஞர் சோலையில் குயிலைச் சந்திக்கும்போது அங்கிருந்த பறவை களெல்லாம் பறந்தோடுகின்றன. இவர்கள் பேச்சு முடியுந் தறுவாயில் பறந்து சென்ற பறவைகள் யாவும் சோலைக்குத் திரும்புகின்றன. காதலன்-காதலி சந்திப்புக்கும் பேச்சுக்கும் தனியிடம் இன்றியமையாதது என்ற கருத்தைப் பறவை யினங்களும் தேர்ந்துள்ளன என்று கவிஞர் காட்டுவது அற்புதம்! மிக மிக அற்புதம்!! குயில் பாட்டில் கண்டதும் காதல்’ என்ற முறை கையாளப் பெற்றுள்ளது. குயிலின் முற்பிறப்பு வரலாற்றைக் கூறும்போது இதனைக் காணலாம் சின்னக் குயிலி என்று திருநாமம் பெற்ற குயில் ஒரு நாள் மாலை தன் தோழி யருடன் காட்டில் விளையாடிக் கொண்டிருக்கின்றாள். அப்பொழுது சேரமானின் மகன் வேட்டையின் நிமித்தம் அக்காட்டிற்கு வருகின்றான் இருவரும் ஒருவரையொருவர் காண நேரிடுகின்றது. காதல் கொள்ளுகின்றனர். இதனை, நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே வேட்டைக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான் தன்னருமை மைந்தன்; தனியே, துணை பிரிந்து மன்னவன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத் தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை வாழியவன் கண்டுவிட்டான் மையல் கரை கடந்து -2ု. குறுந். 114 21. தா. கோ. 132.137