பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு நின்னைத் தனக்காக நிச்சயித்தான்; மாதுநீ மன்னவனைக் கண்டவுடன் மாமோகம் கொண்டு விட்டாய், நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய்; அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்து விட்டீர்” இத்தகைய காதல் மரபு தொல்காப்பியர் காலத்திலிருந்து ஓர் இலக்கிய மரபாகக் கையாளப்பெற்று வருகின்றது. அகநானூறு, கலித்தொகை, பெருங்கதை, சீவக சிந்தா மணி கம்ப ராமாயணம் ஆகியவற்றில் இத்தகைய மரபுடன் காதல் கருவாய்த் தொடங்கி வளர்வதைக் காணலாம். ஆனால் குறுந்தொகையில் இஃது அற்புதமாகக் காட்டப் பெறுகின்றது. யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் துந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயனிர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே" (யாய் - என்தாய்; ஞாய் - நின்தாய்; கேளிர் உறவினர்; புலம் - நிலம்) இதில் உறவுத் தொடர்பும் நட்புத் தொடர்பும் இல்லாத இரண்டு நெஞ்சங்கள் இயல்பாகவே அன்பு நிரம்பியிருத்தலும் இந்த அன்பு பலப்பல பிறப்புகளிலே பயின்று முதிர்ந்த உழுவலன்பாயிருத்தலும் சுட்டப்பெறுதலைக் கண்டு மகிழலாம். 22. கு, பா. குயிலின் முற்பிறப்பின் வரலாறு - அடி (61-72) 23. அகம்-48 24. குறுந். 40