பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலோ காதல் 33 காதல் வாழ்க்கையில் உணர்ச்சிகளிடையே ஒரு போராட்டம் நிகழ்வதைக் காணலாம். தன்னடக்கத்திற்கும் பொங்கி வரும் காதலுணர்வுக்குமிடையே நடைபெறும் போராட்டம் இது. தலைவனுடைய குணங்களாகிய அறிவு, நிறை, ஒர்ப்பு, கடைப்பிடி என்ற நான்கு குணங்களும்; தலைவியின் குணங்களாகிய நாண், அச்சம், மடம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் அவரவர் தன்னடக்கத்துடன் போராடும். ஆணுள்ளமும் பெண்ணுள்ளமும் ஒன்றை யொன்று கலக்குங்கால் 'இந்த நான்மையும் வேட்கையான் மீதுTரப் பட்டுப் புனல் ஒடுவழிப் புல் சாய்ந்தாற் போலச் சாய்ந்து கிடக்கும். அவ்வின்றியமையாது நின்ற வேட்கை எல்லா உணர்வினையும் நீக்கித் தானேயாய், நாண்வழிக் காசு போலவும், நீர்வழி மிதவைபோலவும, பான்மைவழி யோடி இருவரையும் புணர்விக்கும்' என்று களவியலுரையாசிரியர் இவ்வுணர்ச்சிக் கலப்பை அற்புதமாக விளக்குவர். இந்த நூற் பாவில் ‘காமப்புணர்ச்சி இருவயின் ஒத்தல்' என்ற நூற் பாப் பகுதியின் உரை கண்டு இன்புறத்தக்கது. இந்த உணர்ச்சிப்போராட்டத்தைத்-நானுக்கும் கற்புக் கும்இடையே நடைபெறும் போராட்டத்தைத்-தொல்காப் பியமும் குறிப்பிடுகின்றது; திருக்குறளும் விளக்குகின்றது. உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்திர் காட்சிக் கற்புச்சிறந் தன்றென தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவன் உள்வழிப் படினும் தாவில் நன்மொழி கிளவி கிளப்பினும் ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே.' 25. இறை. கள. நூற் 2 (உரை காண்க) 26. தொல். பொருள். களவியல்-நூற் 23 கு-3