பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலோ காதல் 37 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கு:ஒன்று அந்நோய் மருந்து.' கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்திற் செம்பாகம் அன்று; பெரிது.”* யானோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். " என்ற மூன்று குறள்களில் தெளிவாக்குவர். காதல் நாட கத்தில் குறிப்பறிதலின் பல்வேறு காதல் நிலைகளை இந்த மூன்று குறள்களும் அற்புதமாக நிறைவேற்று கின்றன. கம்பநாடனும் இக்குறிப்பறிதலை, இராமபிரானும் சீதாப்பிராட்டியும் ஒருவரை ஒருவர் நோக்கி மிக்க காதல் கொண்டமையை, அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.'" என்று காட்டி, வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்.” என்று முடிவினையும் உரைப்பன். ஆனால் சூர்ப்பனகை இராமனிடம், தாமுறு காமத் தன்மை தாங்களே உரைப்ப தென்பது ஆமெனல் ஆவ(து) அன்றால் அருங்குல மகளிர்க் கம்மா ஏமுறும் உயிர்க்கு நோவேன் என்செய்கேன் யாரும் இல்லேன் காமன்னன்(று) ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி என்றாள்.' 35. டிெ - 1091, 1092, 1094. 36 கம்ப. பால. மிதிலை - 35 37. டிெ. டிெ. டிெ-37 38. டிெ. ஆரணி, சூர்ப்பணகை-45.