பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 குயில் பாட்டு: ஒரு மதிப்பீடு என்று தன் காதலை உரைக்கும் மற்றொரு மரபையும் காட்டுவான் கம்ப நாடன். இது சங்க கால மரபைத் தகர்த் தெறிந்த முறையாகும். இந்தப் புது மரபைத் தழுவிக் கொள் கின்றார் பாரதியார். பாரதிக்கு வாய்விட்டுப் பேச முடியாத இரகசியக் காதலின் இயல்பும் தெரியும்; ஒளிவு மறைவு இல் லாத காதல் செயலையும் நன்கு அறிவார். இந்த இரு வேறு முறைகளையும் பாரதியார் தம் பாட்டில் காட்டியுள்ளோர். காதலுற்று வாடுகின்றேன், காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்' என்று குயில் மாட்டிடம் பேசுவதாக அமைக்கின்றார். இரண் டாம் வகையில் மாடனும் குரங்கனும் பேய் உருவம் கொண்டு குயிலைச் சுற்றித் திரிவதாக, நின்னைக் குயிலாக்கி நீசெல்லும் திக்கிலெல்லாம் நின்னுடன் சுற்றுகின்றார். ' என்று குயிலின் பழம் பிறப்பு வரலாற்றைக் கூறும் முனிவர் வாயிலாக எடுத்துக் காட்டுவதைக் காண்கின்றோம். காதலர்கள் சில சமயம் தாம் காதலிப்போரின் மேனி அழகினை வருணிப்பதுண்டு. கம்ப நாடன் அடையாளம் கூறும் போக்கில் சீதையின் மேனி அழகைப் பாதாதிகேசமாக இராமன் அநுமனுக்குக் கூறும் பாங்கில் பாடல்கள்* அமைத்துக் காட்டுவான். இங்ங்னமே அநுமன் (பக்தன்) சீதைக்கு இராமனை அடையாளம் காட்டும் முகத்தான் அடி முதல் முடியின் காறும் அவன் திருமேனி அழகினைக் காட்டும் போக்கில் பாடல்களை அமைப்பான்." இதற்கு 39 கு. பா. குயிலும் மாடும் - அடி (59-60). 40. டிெ. குயிலின் முற்பிறப்பின் வரலாறு-அடி (191-2) 41. கம்ப. கிட்கிந்தை - நாடவிட்ட. 33.40. 42 டிெ. சுந்தர உருக்காட்டு 39.58,