பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலோ காதல் 39 மாறாக, சூர்ப்பனகை இராவணனுக்குச் சீதையின் மேனி யழகை எடுத்துக் காட்டி அவனுக்குச் சீதையின்மீது காதல் வெறி மூளச் செய்யும் பாங்கில் பாடல்களை அமைப்பான்.'" இந்த மரபுக்கு மாறாக சிந்தாமணியில் கோவிந்தன் தன் மகளின் மேனி அழகினை சீவகனுக்குக் கூறும் முறை அமைந் துள்ளது. வெண்ணெய்போன்று ஊறுஇனியள் மேம்பால்போல் தீஞ்சொல்லள் உண்ண உருக்கிய ஆன்நெய்போல் மேனியள்.'" |ஊறு - கொப்புல உணர்வு; மேம்பால் . மேவும் பால்} இப்பாடற் பகுதியில் இடையன் தன் சாதிக்கு ஏற்பத் தான் அறிந்த பொருள்களையே கோவிந்தைக்கு உவமையாகக் கூறியிருக்கும் நயம் பாராட்டற்பாலது. குயில் பாட்டில் குயில் சோதிப் பெண்ணாக மாறியபின் அவள் அழகை, ...கவிதைக் கணிபிழிந்த சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான்கலந்து காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் மாதவனின் மேனி வகுத்தான் பிரமன் என்பேன்." என்று ரஸம் சொட்டும் கவிதையின் எல்லையாக வருணிப் பார். இந்த மரபு வள்ளலார் தில்லையில் திரு நடனம் புரியும் நடராசப் பெருமானை வருணிக்கும், 4. டிெ. ஆரணிய, மாரீசன்வதை 69-74. 44. சீவக. கோவிந்தையார் இலம்பகம் - 480. - 45. கு. பா. குயிலின் முற்பிறப்பு வரலாறு அடி (241-45) -