பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4{ குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு தனித்தனிமுக் கணிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின் தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி இனித்தநறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுதெள் ளமுதே' 6 என்ற பாடற்பகுதியின் மரபினை யொட்டி அமைந்திருப்ப தைக் கண்டு மகிழலாம். வள்ளலார் பக்தி நிலையில் கூறிய மரபினைப் பாரதியார் காதல் நிலைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்டார். காதலும் பக்தியும் இடம் மாறிச் சென்றாலும் சிந்திக்குமிடத்து ஒரே உணர்ச்சிதானே! 46. ஆறாம் திருமுறை - அருள்விளக்க மாலை - 4106'