பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? குயில் பாட்டு: ஒரு மதிப்பீடு அவன் பாடிய பாட்டிலும் ஆடிய கூத்திலும் அனமந்து விடுகின்றன. அதைப் பார்த்தே நாம் கலைகள்! கலைகள்!” என்று கொண்டாடி உள்ளம் பூரிக்கின்றோம். ஆகவே, நாமும் உலகத்திற்கு மூலமாய் நிற்கும் இன்பப் பெருக்கில் ஒன்றுபட்டு வாழிக் கற்கவேண்டும். அதுவே நம்மை உயர்த் தும்; நமக்கு மன அமைதியையும் தரும். நம்மையும் அறியாமல் நமது உள்ளம் தேடித் திரியும் பொருளும் அதுவேயாகும், பாரதியின் பாடல்களை ஊன்றிப் படித்தால் அவர் இயற்கை எழிலில் ஈடுபட்ட ஒரு பெருங்கவிஞர் என்பது புலனாகும். ஞாயிறு வெண்ணிலா" விண்மீன்கள்", காற்று' மழை" முதலியவற்றைப்பற்றி பாடிய பாடல்களில் இயற்கை எழிலின்மீது அவர்கொண்ட காதலைக் கண்டு தெளியலாம், கவிஞரின் காலைப் புனைவுகளும் மாலைப் புனைவுகளும் விடியல் காட்சிகளும் இதனை அரண் செய் கின்றன. குயிற்பாட்டிலும் அவர்தம் இயற்கை எழிலைப் புனையும் திறத்தினைக் கண்டு மகிழலாம். குயில்பாட்டே விடியற்புனைவுடன்தான் தொடங்குகின்றது. காலை இளம் பரிதி தன் கதிர்களை நீலக் கடலிடை வீசுகின்றான். கடல் நெருப்பெதிரே காணப்பெறும் நீலமணிபோல் ஒளி மிகுந்துமோகனமாம் சோதிபொருந்தி-கண்கவர் வனப்பாய்க் காட்சி தருகின்றது. தவிர, கடலும் தன் வேகத்திரைகளி னால் வேதப் பொருள் பாடுவதாகத் தோன்றுகின்றது கவிஞருக்கு, தோ.பா. சூரியதரிசனம், ஞாயிறு வணக்கம்காண்க டிெ. சோமிதேவன் புகழ், வெண்ணிலாவே காண்க. த. பா: நிலாவும் வான்மீனும் காற்றும். டிெ. புயற்காற்று. டிெ மழை என்ற பாடல்,