பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டில் இயற்கை எழில் 43 காற்றையும் கடலையும் கவிஞர் இணைத்துப் பாடிய கருத்துகள் அற்புதமானவை. இவற்றைப்பற்றிய சில வரிகள்: ”கடலே காற்றைப் பரப்புகின்றது." 'வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் காற்று ஓடிவருகிறது. அங்ங்னம், ஓடிவரும்போது காற்று மேகங்களையும் ஒட்டிக்கொண்டு வருகிறது. இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடற் பாரிசங்களி லிருந்தே வருகிறது. காற்றே, உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர் மழை கொண்டுவா" "காற்றே போற்றி நீயே கண் கண்ட பிரம்மம்." “நமஸ்தே வாயோ, த்வமேய பிரத்யட்சம் பிரஹ்மாஸி" கவிஞர் நமக்கு வேத மந்திரத்தை நவிற்றும்பொழுது நமக்கு மெய் சிலிர்க்கின்றது. காற்றே யுகமுடிவு செய்கின்றான், காற்றே காக்கின்றான்' " 'வீமனும் அநுமனும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும் உயிருடையன எல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர் தான் காற்று. உயிர் பொருள், காற்று அதன் செய்கை' 6. வசன கவிதைகள்-4. கடல்-(2) 1. இடி காற்று-(1) 8. டிெ. காற்று-(2) 9. டிெ. காற்று-(2) 10. டிெ. காற்று-(5)