பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு காணக் கோழியும், நீர்நிறக் காக்கையும், உள்ளும், ஊரலும், புள்ளும், புதாவும் வெல்போர் வேந்தர் முனையிடம் போல, பல்வேறு குழுஉக்குரல் பரந்த ஒதையும்; உழாஅதுண் தொளியுள் புக்கு அழுந்திய கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான் சொரிபுறம் உரிஞ்ச, புரி நெகிழ்பு உற்ற குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய, கருங்கை வினைஞரும் களமருங் கூடி ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும் கடிமலர் களைந்து, முடிநாறு அழுத்தி தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறு ஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றி செங்கயல் நெடுங்கண் சில்மொழிக் கடைசியர் வெங்கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்; கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டி பார்உடைப் பனர்போல் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்; அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த பெருஞ்செய் நெல்லின் முகவைப் பாட்டும்; தென்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த மண்கணை முழவின் மகிழ்இசை ஒதையும்: பேர்யாற்று அடைகரை நீரின் கேட்டு, ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு அவலம் கொள்ளார்.”* கனைகுரல்-ஒலிக்கும் குரல்; கானக் கோழி - கானாங் கோழி, உள்ளான், ஊரல், புள்-பறவை விசேடங்கள்; புதா 14. சிலப். நாடுகாண். அடி. (112-141)