பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு பஞ்சாமிர்தம் போல் இனிமையான காட்சியாக்குகின்றது." இதனை அடுத்து வரும் கவிதைப் பகுதி: கண்ணையினி தென்றுரைப்பார்: கண்ணுக்குக் கண்ணாகி விண்ணை அளக்குமொளி மேம்படுமோ? இன்பமன்றோ? மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும் மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல் நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை ஒப்புளதோ? புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து விண்ணை வெளியாக்கி விந்தை செயுஞ் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண்விளித்து நான் தொழுதேன் நாலு புறத்துமுயிர் நாதங்கள் ஓங்கிடவும் இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன்.'" கவிஞர் வான் வெளியைச் சோதி கவர்ந்து சுடர்மயமாக்கும் விந்தைக்கு உவமை யொன்று காண முடியுமா? என்ற வினாவை எழுப்புகின்றார். நாம் சிந்தித்துப் பார்த்தால் உண்மையிலேயே அதற்கொப்பு வேறு காண முடியாததனை அறிகின்றோம். ஆனால், 'மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும் மேலவரும் அஃதோர் விரியுமொளி, என்று யோகியர் மனத்தில் காணும் பரஞ்சோதியினைக் கவிஞர் ஒப்புக் கூறலாம் என்கின்றார். இந்த நல்லொளியைத் 16. படிமக் காட்சிகளை மேலும் அறிய விரும்புவோர் இவ்வாசிரியரின் பாரதீயம் என்ற நூலில் (10-வது கட்டுரை) கண்டு தெளியலாம் (பழநியப்பா பிரதர்ஸ், சென்னை-14; திருச்சி-21) 17. கு. பா. அடி (35-44)