பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டில் இயற்கை எழில் 49 தவிர, இந்த விந்தைத் செயும் சோதிக்கு வேறோரு பொருளை ஒப்புக் காட்ட முடியாது என்று முன் சொன்ன தையே கோடிட்டுக் காட்டுகின்றார். பாரதியாரின் தனிச் சிறப்பு அவர் கொண்டிருந்த மனித உணர்ச்சியே யாகும். மானிட சாதியின்மீது அவர் கொண்டி ருந்த அளவு கடந்த அன்பே இதற்குக் காரணமாகும். மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன், வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்."" என் கவிதைப் பகுதியில் இந்த அன்பைக் காணலாம். பாரதி யாரின் மனம் வெறும் இயற்கை ஒவியத்தில் அதிகமாக ஈடு படவில்லை. மனித உருவத்திற்கு ஒர் அணியாய் விளங்காத இயற்கைக் காட்சியை அவர் மனம் நாடவில்லை. ஒரு மனித சமூகத்தின் உணர்ச்சி வெளியீட்டை அவர் காணும்போது தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கைக் காட்சியிலும் அந்த உணர்ச்சியின் பிரதிபலிப்பைக் காண முயல்பவர் இவர். இயற் கையைத் தம் கவிதைகளில் புனைந்து காட்டும்திறனில்கவிஞர் கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட போக்கைப் பயன்படுத்து கின்றனர். ஒருவர் இயற்கையை ஒர் உலகமாகக் காண்பார். இவர் அதன் எழிலில் மூழ்கித் தன்னை மறந்து விடுவார்; பாரதிதாசன் அழகைப்பற்றிக் கூறும் கவிதைகள்'" இவ் வகுப்பைச் சார்ந்தவை. மற்றொருவர் இயற்கையைத் தன் கற்பனையின்மூலம் திரும்பப் படைத்து அப்படைப்பைப் பார்த்து மிக மகிழ்வார். பாவேந்தரின் நீல வான் ஆடைக் குள்’ என்று தொடங்கும் பாடல்" இவ் வகையைச் சேர்ந் 18. தோ. பா ஹே: காளி!-1 19. அழகின் சிரிப்பு 20. புரட்சிக்கவி’ கு-4