பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஒசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ?" என்ற பாடற் பகுதியில் காட்டுகின்றார். பல்வேறு பட்ட இன்னோசைகளைக் கவிஞர் குயிலின் வாயில் வைத்துப் பட்டியலிட்டுக் காட்டுவதால் கவிஞரே அவற்றில் ஈடுபட்டவர் என்பதற்கு அகச்சான்றாக அவை அமைந்து விடுகின்றன. இந்தப் பட்டியலே குயில் பாட்டிற்கும் ஒருவித ஓசை நயத்தை நல்குகின்றது. இசையின் சிறப்பைச் சங்கப் புலவர்கள் தம் பாடல்களில் எடுத்துக் காட்டியுள்ளனர். குறிஞ்சித்தலைவி யொருத்தி பெருவரை மருங்கில் குறிஞ்சிப் பண்ணை இசைத்தது கேட்டுத் தினைப் புனத்தில் மேய்ந்து கொண்டிருந்த மறம் புகல் மழ களிறொன்று தான்வாயிற் கொண்ட தினைக்கதிர்களை உட் கொள்ளாமலும், நின்ற நிலையில் பெயராமலும் உறங்கிற்று என்பதை அகநானூற்றுப் புலவர் காட்டுவர். இன்னோசை யைக் கேட்டு அதில் ஆழ்ந்து அநுபவிக்கும் அசுணமா என்ற விலங்கு நற்றிணையில் குறிப்பிடப்பெறுகின்றது. கலித் தொகையிலும் பரிகோலால் குத்தவும் தன்னெறியில் நில் லாத மதக் களிறு மெல்லிய யாழோசையில் மயங்கி நின்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பெறுகின்றது." திணைப்புனங் காக்கும் தலைவியொருத்தியின் குரல் கிளிக்குரல்போல் இனிமையாக இருத்தலின் கதிர்களை மேயும் கிளிகள் ஆரவாரித்துச் செல்வ தில்லை என்ற நிகழ்ச்சியைக் கூறும் முகத்தான் கிளிகள் இசைக்கு மயங்கும் என்பதைக் குறிப்பிடுகின்றார் கணிமேதா வியார் என்ற புலவர் பெருமான்." 5. டிெ. டிெ-அடி (93-100) 6. அகம் - 102 7. நற். 304 8. கவி 22 אס. 9. திணைமாலை காற்றைம்பது - 2.