பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு பொருள் என்று கொள்ளலாம்; அல்லது ஆன்மிகமான பொருள் என்றும் கொள்ளலாம். பாரதத்தில் உள்ள ஒரு கதையை இப்பொழுது நினைவு கூர்வோம். ஒருகாட்டில் புலி யால் துரத்தப்பட்ட மனிதன் ஒருவன் ஒரு பாழுங் கிணற்றில் விழுகின்றான். கீழே கொடிய நஞ்சுடைய நாகம் படமெடுத்து நிற்கின்றது. கிணற்றில் தொங்கிக் கொண்டிருந்த ஆலம் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு அந்த மனிதன் தொங்கு கின்றான். ஆலம் விழுதை வெள்ளையும் கறுப்புமான எலிகள் கடித்துக்கொண்டுள்ளன. இந்த அபாய நிலையில் மேவிருந்து சொட்டிய தேன் துளிக்கு நாக்கை நீட்டுகின்றான் அந்த மனிதன். இஃது உலக வாழ்வை உட்பொருளாகக் கொண்ட கதை. அனைத்தும் குறியீடுகள். காடு இந்த உலகம். துரத்து வது ஆசை. விழுவது ஆபத்தில். பிடித்துக்கொண்டிருப்பது உயிரை. அதனை அறுப்பவை இரவு பகல். இந்த நிலையிலும் தேன் சொட்டுக்கு நாக்கு நீட்டல் இத்தகையது வாழ்வின் ருசி என்பது கதையின் உட்பொருள். இராமாயணத்தின் உட் பொருளையும் சிந்திப்போம். அயோத்தி அரச குமாரன் மனைவியை இழந்து வானரர்களைத் துணை கொண்டு அரக்கனை மாய்த்துச் சீதாப்பிராட்டியை மீட்டதாகக் கதை. இராமன் பரமான்மா, சீதை சீவான்மா. சிறைபிடித்துச் சென்றவை பத்து இந்திரியங்கள். சீவான்மாவிற்குத் தேறுதல் கூறியவர் குரு. கலப்பற்ற பக்தியினால் சீவான்மா இந்திரியங் களாகின்ற சிறையினின்றும் மீட்கப்பட்டு பரமான்மாவைச் சேர்கின்றது. இஃது இராமாயணத்தின் ஆன்மிகப் பொருள். வேதாந்தப் பொருள். இங்கும் குறியீடுகளே பங்கு கொள் கின்றன. இந்த முறையில் குயில் பாட்டிற்கு ஆன்மிகப் பொருளோ வேதாந்தப் பொருளோ உண்டா? என்ற வினா எழுகின்றது. கவிஞர் உண்டு என்கின்றார். அஃது என்ன என்று அவர் ஏன் கூறவில்லை? இந்த வினா மீண்டும் பிறக் கின்றது