பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 குயில்பாட்டு.ஒரு மதிப்பீடு குரங்கன், நாயகன்.இவர்கள் யாவர்? இங்குக் குயில் சேதநன் அல்லது சீவன். சீவன் தான்’ என்ற அகந்தையாலும் தனது' என்ற மமதையாலும் பரமான்மாவிடம் தனக்கு நேரக்கூடிய உண்மையான ஆனந்தத்தை மறக்கின்றது. சீவன் பரம் பொருள் அல்லது பரமான்மாவை அடையும் முயற்சிதான் சஞ்சலம் என்று மாமுனிவர்கள் துணிந்துள்ளனர். சீவான் மா பரமான்மாவிடம்கொண்டிருப்பது கட்டுக்கடங்காத கவிதைக் காதல், இலட்சியக் காதல். சீவான்மா பரமான்மாவுடன் ஐக் கியப்படுத்தலே அந்தக் காதலுக்கு வெற்றி. காவியத்தில் குயிலின் காதல் மனத்தின் வேட்கை, அதாவது நாயகனை அடைய வேண்டுமென்ற பேரவாவைக் குறிக்கின்றது. பிரிவு துக்கத்தையும் கூட்டம் சுகத்தையும் உணர்த்துசின்றன. குயில் கவிஞரை நாடித் துன்பத்தையும் அவருடன் கூடி இன்பத்தை யும் பெறுவதுபோல், சீவான்மா பரமான்மாவை நாடித் துன் பத்தையும், பரமான்வாவுடன் கலந்து இன்பத்தையும் பெறு கின்றது என்று ஒருவாறு விளக்கலாம். குயில் - சீவான்மா: கவிஞர் பரமான்மா என்ற குறியீடு கள் சரியே. ஆனால் கதையில் வரும் குரங்கும் மாடும் எவற் றைக் குறிக்கின்றன? குயில் இவர்களுடன் காதல் நாடகம் நடத்துவது ஏன்? இவற்றை விளக்கக் கைவல்யம் என்ற தத்துவநூல் கைகொடுத்து உதவுகின்றது. வேதாந்தத்தில் மனத்தை அலைக்கும் சக்திகள் இரண்டாகக் குறிப்பிடப் பெறுகின்றன. ஒன்று ஆவரண சக்தி. மற்றொன்று விட்சேப சக்தி, பொருளின் உண்மை வடிவத்தை மறைப்பது ஆவரண சச்தி, மனம் இதற்கு வசப்பட்டு உறுதி இன்னது என்று அறி யாமல் உண்மையை மறந்து மயங்கி விடுகின்றது. இச்சக்தி மனத்தைத் தடைப்படுத்திப் பரம் பொருளை அடையாமல் தவிக்க விட்டுவிடுகின்றது. பரம்பொருளை மறப்பது மாடு” என்று கூறுவது புதிது அல்ல. வழி மறைத்திருக்குது மலை போல் ஒரு மாடு” என்று நந்தனார் பாடியுள்ளதை நாம் அறி