பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் உள்ளுறை 65 வோம். மாடு என்பது ஆவரனசக்தி. கதையில் மாடன் குறுக் கிட்டுக் குயிலை மயக்குகின்றான். மாயையில் சிக்குண்ட குயில் மாடனோடு காதல் புரிகின்றது. இது மடமைப் பேய்த்தோற்றமாகின்றது. மாற்றி மாற்றித் தோற்ற மளிப்பது விட்சேப சதியாகும். இ..து ஒருவித ஜாலவித்தை போன்றது. கணத்திற்குக் கணம் இதில் வேற்றுமை காணப்படும். இடத்துக்கு இடம் வேறுபாடு தோன்றுவதிலும் ஒருவேகம் காணப்படும். வேகத்திலும் வேற்றுமையிலும் பொய்யின்பம் தட்டுப்படும். விட்சேப சக்தி யால் கட்டுண்ட மனத்தைக் குரங்கிற்கு ஒப்பிட்டுள்ளனர் தத்துவ அதிஞர்கள். ஓயாத சேட்டையுள்ள குரங்கன் குறுக் கிட்டுக் குயிலைத் தடுக்கின்கிறான், குயில் குரங்கனோடு சோரக் காதல் நாடகம் புரிவது விட்சேப சக்தியின் வெற்றி யாகும். சராணகதிமூலம் பரம்பொருளிடம் ஐக்கியமாவதைக் காட்டுவது குயில் கவிஞரின் கையில் வீழ்தல். இது மெய்க் காதல் வெற்றி பெறுவதைக் குறிப்பிடுகின்றது. ஆவரண, விட்சேப சக்திகளின் ஆட்டம்தான் பிறவிதோறும் ஏற்பட்டு வரும் தொடர்பு, இந்த இரண்டு சக்திகளின் ஆட்டம் அற்ற தும், எல்லையற்ற பேரின்பம் உண்டாகும். குயில்பாட்டில் ஒருமுறை குரங்கின்மீதும் ஒரு முறை மாட்டின்மீதும் தனது கைவாளைச் சுழற்றி எறிவது பொய்ம்மையான மாயத்தை வெட்டி வீழ்த்துவதைக் குறிப்பது. வாளும் வேலும் ஞானத் தின் குறியீடுகள். ஞானச்சுடர் வடிவாள் (கந்தரலங்காரம். 25) வழிக்குத்துணை வடிவேல் (டிெ70) என்ற தொடர் களை நோக்குக. (2) இப்பாட்டின் தத்துவம் இன்னொரு விதமாகவும் சிந் திக்க இடம் தருகின்றது. சாதாரணமான புள்ளொன்று ஒரு கு-5