பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

గ్రీనీ குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு மாட்டினிடமும் ஒரு குரங்கினிடமும் காதல்புரிகின்ற நிகழ்ச்சி நடைபெற முடியாதது என்று கருதக்கூடியது. பின்னர் மாடனும் குரங்கனும் பேயாகித் தன்னுருவத்தைக் குயில் மறந்து போகுமாறு செய்கின்றனர். அதன் பிறகு குயில் தென் பொதியை மாமுனிவரிடம் பேசித் தன் முற்பிறப்பின் வர லாற்றை அறிந்த பிறகு ஞானம் பெற்ற பிறகு - ஒரு பெண்ணுருவம் பெற்று புருஷன் என்கின்ற ஆன்மாவிடம் தன் மெய்க் காதலை எடுத்துச் சொல்லி இருவரும் ஆவி கலந்து ஆனந்திப்பதும் சிந்திக்கத் தக்கது. குயில் என்பது சீவனைக் குறிக்கும் ஒரு குறியீடு. சின்னக்குயிலி தான் என்ற அகந்தை யாலும் தனது என்ற மமதையாலும் புருஷன் என்ற ஆன்மா விடம் தனக்கு நேரக்கூடிய மெய்யானந்தத்தை மறக்கின்றாள்; தன் மாமன் மகனான மாடனிடமும் தான் என்ற அகந்தை மிகுந்த குரங்கனிடமும் போலியன்பு காட்டுகின்றாள். இந்த வினைப்பயனால் அடுத்தபிறப்பில் தன் சொரூபத்தை மறந்து சடமாகிப் பண்டைப் பிரகிருதியின் பரிணாமமாகின்ற உடலின் மீது அன்பு வைக்கின்றாள். அந்த மயக்கம் தெளிந்தவுடன் உடலைக்காட்டிலும் சற்று மேலான மனத்தின்மீது நேசம் காட்டுன்றாள். மனமோ எப்பொழுதும் நிலையின்றி நம்முள் அடங்காமல் இங்குமங்கும் திரிந்து ஒடிக்குதித்துச்சேட்டைகள் செய்து வருகின்றது. மனத்தையும் புலன்களையும்(இந்திரியங் களையும்) குரங்கிற்கு ஒப்பிட்டுச் சொல்வது நம் நாட்டவர் மரபாக இருந்து வருவதை நாம் அறிவோம். பின்னர் குயிலி பரமகுருவின் உபதேசம் பெற்று இருவகை மயக்கமும் தெளி கின்றாள்; புருஷன் என்ற ஆன்மாவை உள்ளபடி அறிகின் றாள். அந்த ஆன்மாவிடம் மெய்யன்பு வைத்துத் தன் உண்மையான உருவத்தைப் பெற்று அந்த ஆன்மாவிடம் ஒன்றாகிப் பரமானந்தம் அடைகின்றாள். இந்த உள்ளுறைப் பொருளைப் பாரதியார் தம் குயில் பாட்டில் பொதிந்துவைத் துள்ளார் என்றும் கருதலாம்.