பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் உள்ளுறை 67 (3) இன்னொரு விதமாகவும் சிந்திக்கக் குயில் பாட்டு: இடந் தருகின்றது. குயிலி முற்பிறப்பில் சேர வளநாட்டில் வீர முருகன் என்னும் வேடன் மகளாகப் பிறக்கின்றாள். முருகன் அழகுக்கும் ஆற்றலுக்கும் குறியீடாக நிற்பவன். ஆதலால் குயிலி அழகியதொரு நங்கையாகப் பிறந்தாள் என்று கருதலாம். அன்பும் அழகும் ஆண்டவனை அணுகும் வழிகள் என்பதை ஆன்றோர்கள் வகுத்துக் காட்டியுள்ளனர். குயில்பாட்டில் பாரதியார் இத்தகையதொரு வழியை வகுத் துக்காட்டுகின்றார் என்று கருதலாம். பாரதியார் ஆழ்ந்து ஆராய்ந்தே முருகன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தாரா? அன்றா? என்பது ஊகித்து உய்த்தறியக்கூடியதொன்று ஆயினும் முருகன்’ என்ற சொல் பல்வேறு விதமாக நம்மைச் சிந்திக்க வைக்க இடந்தருகின்றது. சேரநாட்டுப் பெண்ணைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் வெளிப்படை. பொதுவாக, சேரநாட்டு மகளிர் அழகினால் புகழ் பெற்றவர் என்பது நாடறிந்த உண்மை. சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரநன் னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் தோணிக லோட்டிவிளையாடிவருவோம்." என்ற பாடலில் சேர நாட்டு இளம் பெண் அழகுக்காகவே காட்டப்பெற்றுள்ளமையக் கருதுக. இந்நாட்டுப் பெண்கள் தம் நாட்டுக்குரியவளல்லாத அதிசயப் பெண்ணை தெய்வ நிலைக்கு உயர்த்தி வழிபட்டதைச் சிலப்பதிகாரத்தின் உட் கருத்தாகத் திகழ்வதைப் பாரதியார் நன்கு அறிவார். புகார் நகரம் அளவுக்கு மீறிய சொகுசான இன்பவாழ்வால் அழிந்து பட்டதையும், கெட்டகாலத்தால் மதுரை மாநகர் விசனிக்கத் தக்க முறையில் அறநெறி வழுவியதையும், சேரநாடு தன்னு 2. தே.கீ. பாரததேசம் - 5