பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் உள்ளுறை 69 பயணமாகும். பாட்டின் இறுதியில் கவிஞர் தன்னுடைய அழி யாத ஆன்மாவின் பேராளியைக் கண்டு அதில் ஆழ்ந்து விடு வதைக் காண்கின்றோம். (5) பாரதியார் இசைக் கலையைப்பற்றிப் பெருமதிப்பு கொண்டவர். தானும் இசைக் கலையில் வல்லவர்; இசைக் கலையில் திறம் பெற்றுத் திகழவேண்டும் என்று பேரவாக் கொண்டவர். -3;థ} : நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக நன்றா வுளத்தழுந்தல் வேண்டும் - பல பண்ணிற் கோடி வகை இன்பம் . நான் பாடித் திறனடைதல் வேண்டும். * என்ற பாடலில் இந்த அவா வெளிப்படுதலைக் காணலாம். தரம் மிக்க இசைவாணரின் குரல் மிக இனிமையாக அமைந் திருத்தல் வேண்டும்; அவர் இசைத்துறையின் நெளிவு சுழிவு களையெல்லாம் நன்கு கற்றுத் துறைபோய வித்தகராயிருத் தல் வேண்டும். ஆனால் இந்தத் துறை நுணுக்கம் இசையின் முடிவான நோக்கமாகிய இசையினிமைக்குள் அடங்கியதாக இருத்தல் வேண்டும் இசைபற்றிப் பலவிதிகளும் நுணுக்கக் குறிப்புகளும் எழுந்துள்ளன. சிலசமயம் இவை இசைக்கலை யின் ஆன்மாவையே திக்குமுக்காடச் செய்து விடுவதும் உண்டு. உண்மையான இசைக்கலைஞன் இசை இணக்கத்தை விளைவிக்கும் விதிகளையும் சட்டக் குறிப்புகளையும் மறந்து அவற்றை வென்ற நிலையில் இருந்து பாடவேண்டும்; காரணம், அனைத்தையும் மறந்த நிலையில்தான் நிறை வுடைமையை எய்தலாம். இவையெல்லாம் இசைபற்றிப் பாரதியார்கொண்டுள்ள உயர் கருத்துகளாகும். கிழ மாட்டின் வானத்திடிபோல “மா வென்று உறுமுதலும் குரங்கின் عس---------------------------------مسم---سسسسسسسسسسسسسسسس سمدس 3. தோ.பா. யோக சித்தி -7