பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 குயில்பாட்டு : ஒரு மதிப்பீடு பொருளற்ற நெறுநெறுவென்று ஓயாமல் கடித்துக் கொள்ள லும் குயிவின் பாட்டிற்கேற்பச் சலிப்பு தரும் முறையில் தாவிக் குதிப்பதும் தாளங்கள் டோடுவதும் இசைபற்றிய அடிப்படையை அறியாத ஒரு சாதாரண இசைவாணனை நினைவுகூரச் செய்கின்றன. இவன் அங்க சேட்டைகளையும் முகச்சுழிப்புகளையும் இசையென்று தவறாகக் கருதுபவன். குயிலோ எல்லா முறையிலும் முழுமை பெற்ற குற்றங் குறை பாடுகள் எவையும் இல்லாத இசைவாணரை நினைக்கச் செய்கின்றது. இங்ங்ணம்-குயில் பாட்டு அவர் காலத்து-ஏன்? இக்காலத்து இசைவாணர்களை எள்ளும் குறிப்புடையதாக வும் அமைந்திருப்பதாகக் கருதலாம். இப்படியெல்லாம் குயில் பாட்டுக்குச் சப்பைகட்டிப் பொருள் கூறலாம். பாடலைப் படிப்போரின் அடிப்படை ஞானத்திற்கும் பலதுறை அறிவிற்கும் ஏற்ப இத்தகைய 'பொருள் விரிவு தோன்றக்கூடும். ஆனால் இத்தகைய "பொருள்களையா பாரதியார் தம் குயில் பாட்டில் அடக்கி வைத்தார்? என்ற வினாவை எழுப்பினால், ஆமாம் என்று சொல்லுவதற்கு எவருக்கும் துணிவு இராது. அநேகமாக அப்படியிருக்கலாம் என்று வளவளப்பு முடிவும் கொள்ள முடியாது. பாரதியார் பாடியுள்ள பல வேதாந்தப் பாடல் களில் எந்த ஒரு பாடவிலாவது சீவான்மா பொய்யுறவாடிக் கொண்டிருக்கும் ஆவரண, விட்சேப சக்திகளைக் குறிப்பிட் டிருப்பதாகத் தெரியவில்லை. மாயையின் இந்தப் பாகுபாடு களை அவர் உணர்ந்திருந்தார் என்பதற்குச் சான்றுகள் இல்லை. படிப்போரின் யுக்திக்கும் அறிவுக்கும் ஏற்பக் குயில் பாட்டிற்கும் வேதாந்தத்திற்கும் பிறவற்றிற்கும் இவ்வளவு பொருத்தம் உள்ளது என்று காட்டலாமேயன்றி பாரதியார் இப்பாட்டில் கொண்ட வேதாந்த உள்ளுறை இதுதான் என்று அறுதியிட்டு உரைத்தல் இயலாது.