பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா." ឧៈ ឆ្អ , பூதங்க ளொத்துப் புதுமைதாம் விந்தையெனில் நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ?* என்றும் பாடச் செய்கின்றது. குரங்கன் சித்திரக் கவி புனையும் வக்கனைப் புலவ ருக்குக் குறியீடு; அங்ங்ணமே மாடன் இலக்கணப் பொதி சுமக்கும் இலக்கணப் புலவருக்குக் குறியீடு. இவர்கள் இரு வரும் கவிஞருக்கும் கவிதைக்கும் இடையில் போட்டியிடும் போலிகளாகும். தமிழ்க் கவிதை என்னும் தலைவி நீண்ட காலமாகத் தன் தலைவனை விட்டுப் பிரிந்திருந்தாள். உண்மைக் கவிஞரிடம் உயிருக்குயிராக அன்பு வைத்திருந் தாள். இலக்கணப் புலவருக்கும் கவிதைக்கும் இலக்கண வகையில் ஒருவித உறவு உண்டு யாப்பிலக்கணத்தையும் அணி யிலக்கணத்த்ையும் பாட்டியல் நூல்களையும் வைத்துக் கொண்டு வாணிகம் நடத்துகின்றவரல்லவா? கவிதைக்கு இந்தப் புலவரிடத்தில் ஒரு தனிப் பரிவு உண்டு. வரகவி அதாவது சித்திரக் கவி புனைபவர் கவிதையிடம் படாடோ பத்துடன் உரிமை கொண்டாடுபவர். இவரது செருக்கில் மயங்கிக் கவிதையின் பெற்றோர் இவருக்குத் திருமணம் புரி விக்க இசைகின்றனர். குரங்கனும் மாடனும்-சித்திரக்க கவிஞரும் இலக்கணப் புலவரும் - குயிலிடம் போலி நாடகம் நடத்துகின்றனர். உண்மைக் கவிஞர் இதனைக் கண்டு நெஞ்சம் குமுறுகின்றார்; சினம் பொங்கி எழுகின்றது. உண்மை வெளிப்பட்டு விடுகின்றது. கவிதை மங்கை கவிஞ ரிடம் ஐக்கியமாகி விடுகின்றாள். குயில்பாட்டு என்ற அற்புதக் கதைக் காவியம் பிறந்து விடுகின்றது. 7. கு. பா: குயிலும்மாடும்-அடி 96 8. டிெ. டிெ அடி (97.98)