பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் உள்ளுறை 73 இத்தகைய உள்ளுறைப் பொருள் கவிதையில் அமைந்தி ருந்தால் கவிஞர் இதை வெளிப்படையாகக் கூறாவிடினும் குறிப்பாகக் கூட ஏன் காட்டவில்லை? என்ற வினாவுக்கு விடை கிடைத்து விடுகின்றது. இதை வெளிப்படையாகக் கூறினால் கவிஞரின் தற்பெருமை விளம்பரம் ஆகிவிடும்; காவியத்தின் சுவையும் குன்றிவிடும். கற்பனைக்கு அடிப் படையாக இருந்த கருத்தைச் சொல்ல வேண்டும் என்று கவிஞருக்கு ஆசைதான். ஆனால் சொல்லுவதில் ஒருவித கூச்சம். இஃது உண்மையாக இருந்தால் குயில்பாட்டின் இறுதி மூன்று அடிகளின் குறிப்பு தெளிவாகின்றது. இதற்குச் சான்றாகப் பாரதியின் வாக்கிலேயே ஏதாவது சான்று தென் படுகின்றதா? என்று பார்ப்போம். வாராய்! கவிதையாம் மணிப் பெயர் காதலி; பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன, நின்னருள் வதனம்தான் நேருறக் கண்டே அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள,யாம் மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்; கலந்துயாம் மொழியிடைக் களித்தவந் நாட்களில் பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற தீங்குரல் உடைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்; மலரினத்து உன்றன் வாள்விழி ஒப்ப நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்; குளிர்புனற் சுனைகளில் உன்மணிச் சொற்கள்போல் தண்ணிய நீருடைத் தறிகிலேன்: நின்னொடு தமியனாய் நீயே உயிரெனத் தெய்வமும் நீயென நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்" 9. த. பா: கவிதைக் காதலி. (ஒரு பதிப்பில் இது கவிதா தேவி அருள் வேண்டல்’ என்ற தலைப்பின் கீழ் உள்ளது)