பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii சான்றுகளாகும். பாரதி - யார்? என்றதைக் கூற வரும் கவிஞர் வாலியின் பாடலை எடுத்தாளுமிடத்தில் (பக் 97) புதுத்தமிழ்ப் பயிற்சியின் மணமும் கமழ்கின்றது. மற்றும், இசையின் பெருமை குறித்து எழுதுமிடங்களில் புதுமையும் பழமையும் கைகோப்பதைக் கண்டு மகிழலாம். 'பாட்டின் உள்ளுறை என்ற ஏழாவது இயலில்,பேராசிரி யருடைய ஆய்வு நெறி தெளிவாகத் தெரிய வருகிறது; அன் னார் புலமை அங்கு ஒளி வீசுகின்றது. குயிலைச் சீவான்மா வாகவும் கவிஞரைப் பரமான்மாவாகவும் எண்ணிப்பார்க்கும் இடமும், குயில் இறுதியில் கவிஞரின் கையில் வீழ்தலைச் "சரணா கதி மூலம் பரம்பொருளிடம் ஐக்கியமாவது போல், என்று பொருத்திக் காட்டும் இடமும் மிக அழகாக உள்ளன. "ஊகித்துக் கூறும் உள்ளுறை என்ற கிளைத் தலைப்பில் அவர் கூறும் முடிவுகள் கற்றுவல்ல பெரியார்களுக்குக் கற் கண்டாய் இனிப்பனவாகும். இந்நூலின் எட்டாவது இயல் குயில்பாட்டின் இலக்கியத் தன்மைகளைப் பேசுகின்றது. இந்த இயலில் இடம் பெறுவன வற்றைச் சிறந்தன என்ற புகழ முடியாவிட்டாலும், வேண்டாமென்று ஒதுக்கிவிடமுடியாத ‘விடுதலறியா விருப்பு அவற்றின்பாலுள்ளது என்றே கூறவேண்டி யுள்ளது. ஒருவகையான எழுத்தாற்றலே அவ்விடுதலறியா விருப்புக்கான காரணமுமாகும். பாரதி என்ற மகாகவி பிறந்ததால் தமிழ்நாடு பெருமை பெற்றது. அவரால் தமிழ் ஏற்றம் பெற்றது. அந்தப் பைந் தமிழ்ச் சாரதி தொடாதது ஒன்றுமில்லை; தொட்டதை அவர் அழகு செய்யாமல் விட்டதுமில்லை. அந்த மகாகவியின் கவிதை ஆழமும் கரையும் காணமுடியாத கடலாகும். அத் கடலில் ஆர்வமுள்ள அனைவரும் ஆடித் திளைக்கலாம்.