பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் உள்ளுறை 75 இந்தப் பாட்டில் தென் பொதியை மாமுனிவர் தோன்று கின்றார். அவரே குயிலுக்கு அதன் முற்பிறப்பு வரலாற்றை உரைத்தவர். அதன் அன்புக் காதலனை ஆசை நாயகனைஅடைவதை அருளியவரும் அவரே. பொதிய மலையில் வாழ்ந்த முனிவர் அகத்தியர்; குறுமுனி என்று தமிழர்களால் புகழப் பெறுபவர். அவர் புராணமரபில் தமிழ்க் கவிதைக்குமரபுத் தளையில் சிக்கித் தவிக்கும் தமிழ்க் கவிதைக்கு- கழு வாய் உரைத்துச் செல்லுகின்றார். குயில் பாட்டின் உள்ளுறைப் பொருளுக்கு, குறுமுனி பிறிதொரு சான்றாக அமைந்து விடுகின்றார். இந்தக் கருத்துகளை யெல்லாம் மனத்தில் அமைத்துக் கொண்டு ஒரே மூச்சில் கவிதையைப் பல முறை படித்தால் மேலும் பல பொருத்தங்கள் துலக்க மடையும். இதனால் காவியத்தின் சிறப்பும் ஓங்கி உயர் வதற்கும் வாய்ப்புகள் நேரும்.