பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 குயில் பாட்டு: ஒரு மதிப்பீடு தொடக்கம்: பாட்டின் தொடக்கமே மிகவும் எடுப்பான கம்பீரத்துடனும் பேரழகுடனும் அமைந்துள்ளது. காலை யிளம்பரிதி வீசும் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரை புடைய செந்தமிழ்த் தென்புதுவை' என்ற கவிதைப் பகுதியில் எடுப்பான ஒருவித கம்பீரத்தைக் காண முடிகின்றது. குயில் பலவிதமான இன்னோசைகளைப் பட்டியலிட்டு எடுத்துக் காட்டும் பகுதியிலும் இந்த எடுப் பான கம்பீரத்தைக் காணலாம். வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்" என்ற அடிகள் மறக்க முடியாதபடி நம் மனத்தில் ஆழப் பதிந்து விடுகின்றன. தெளிவான படிமமும், இன்னோசை யும், இயக்கமும் இவற்றில் விளைவித்திருக்கும் மாயம் சொல்லுந்தரமன்று. முடிவு: குயில் பாட்டின் முடிவும் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. குயிலைக் கவிஞர் முத்தமிடும்போது அது ஒரு சோதிப் பெண்ணாக மாறி விடுகின்றது. இந்தக் காட்சி யைக் கவிஞர், ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா! பெண்ணொருத்தி அங்குநின்றாள்; பேருவகை கொண்டுதான் கண்ணெடுக்கா தென்னைக் கணப்பொழுதுநோக்கினாள் بسیای مستن مجسمه 3. ஐ. குயில் அடி (டி) 4. டிெ 3 குயிலின் காதற் கதை.அடி (39-40)