பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு $# மாயோடும் வெள்ளத்தில் படிப்போரின் மனம் அடித்துச் செல்லப் பெறுதல் வேண்டும். இந்த வகை இலக்கியத்தின் மற்றொருமுக்கியமான பண்பு'அளவு (Scale)என்பது. அளவே கவிதைக்கு ஒரு தனி அழகைத் தரும். தனித்தனி உறுப்பு களோ,பகுதிகளோ எவ்வளவு கவர்ச்சியுள்ள அழகுவாய்ந்தன வாக இருப்பினும், அவை யானை அளவுள்ள குதிரையும், குதிரை அளவுள்ள யானையும், பெரிகோபுரத்தைத் தாங்கும் வீடும்’ என்ற முறையில் அமைந்தால் அவை கோரக் காட்சிக ளாகி விடும். நூல்களுக்கும் உயிருள்ள பிராணிகளுக்குரிய சில பண்புகள் அமைந்தால்தான் அழகு. கதைக்கேற்ற கதை மாந்தர்களும் நிகழ்ச்சிகளும் நீளமும் ஒருங்கே அமைந்து படைக்கப்பெறும் கவிதையே நல்ல நிகழ்ச்சியுரைக்கும் கவிதை யாகும். பரிமாணம் என்பது மற்றெல்லா அழகுகளையும் தன்னுள் அடக்கும் பெரிய அழகைக் குறிக்கும். இப்பேரழகில் 'குயில்பாட்டு மிக்க கவர்ச்சியுள்ள படைப்பாகும். குயில்பாட்டை ஒரே மூச்சில் படித்து முடிக்கலாம். அப்படித்தான் படித்து முடிக்கவும் வேண்டும். அப்படிப் படித்து முடிப்பவர் மனத்தில் ஒரு தனிப்பட்ட ஒருபடித்தான உருவம் தோன்றுவதை அறிவர். இதை எடுத்துக்காட்டொன் றால் விளக்குவது இன்றியமையாததாகின்றது. ஒரு மனிதன் என்று கூறும்போது அந்தக் கருத்தில் அவனுடைய உறுப்பு களின் பட்டியல் இல்லை; அவனுடைய பண்புகளின் பட்டியல் இல்லை; அவனுடைய பட்டறிவுபற்றிய பட்டியலும் இல்லை. இவையெல்லாம் கடந்த ஒர் உருவம் அந்தக் கருத்தில் தோன்றுகின்றதன்றோ? இம்மாதிரியான ஒருமைப் பாட்டைச் (Unity) சுவைக்கும் பாங்கில் உணர இந்தச் சிறிய குயில் பாட்டு இடங் கொடுப்பதுபோல் இக்காலத்தில் தோன்றிய தமிழ் நூல்களில் வேறொரு நூல் இடங்கொடுப் பது அரிதாகவே தோன்றுகின்றது. கவிஞர் வாக்கிலேயே கு-6