பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

குருகுலப் போராட்டம்

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக - தாழ்த்தப் பட்டவர்கள்; பின்தங்கியவர்கள் என்ற பெரும் பட்டியலில் இடம் பெற்று வரும் இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வரலாற்றுச் செய்தி இது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை இளைஞர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களுக்குள்ளே - நடந்த ஒரு விடுதலைப் போராட்டம் இது.

பாரதியார் இந்த நிலையை நன்கு உணர்ந்திருந்தார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கி நடத்திய பெருந்தலைவர்கள் பலர் - எந்த ஆதிக்க மனப்பான்மையில் இருந்தார்கள் என்பதைப் பாரதியார் நன்கு தெரிந்து வைத்திருந்தார். பாரதியார் பாரத நாட்டின் விடுதலையைப்பற்றிப் பாடுகின்ற பாட்டைப் பார்த்தால் இது தெளிவாகப் புரிந்து விடும்.

விடுதலை விடுதலை விடுதலை

பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை