பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டுக் கல்வியின் தேவை

23

தங்களுக்குள்ளேயே ஒரு பிரிவாரைப் பிரித்து வைத்துக் கொடுமைப்படுத்தி வாட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

பள்ளர் என்றும் பறையர் என்றும் புலையர் என்றும் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் ஒரு பெரும் கூட்டத்தார் மேல்சாதிக்காரர்களால் இழிவாக நடத்தப்படும் கொடுமையை அந்நாள்வரை தான் கவனிக் காதிருந்துவிட்ட தவறை உணர்ந்தார். தாழ்த்தப் பட்ட மக்களுக்காக உழைக்க-போராட முன்வந்தார். இந்தியர்களிடையே உள்ள எல்லாப் பிரிவாரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கருதி அன்று முதல் தாழ்ந்தப்பட்ட இனமக்களுக்காக உழைக்கத் தொடங்கினரர்.

தீண்டாமை ஒழிப்புக்காக கோயில் நுழைவுப் போராட்டங்களை அங்கங்கே நடத்த ஊக்க மூட்டினார்.

சாதி யொழிப்புக்காக கலப்பு மணங்களை ஆதரித்தார்.

சாதி ஒழிப்பு உணர்வு மக்களிடையே உண்டாவ தற்காக சமபந்தி விருந்துகள் நடைபெறச் செய்தார்.

காந்தியடிகளின் சீடர்கள் - காங்கிரசுக்காரர்கள் இந்தப் போராட்டங்களிலே ஈடுபட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்க முனைந்தனர்.

தமிழ் நாட்டிலே காங்கிரசுக் கட்சியின் துரண்களாகவும், மக்கள் போற்றும் தலைவர்களாகவும்